Wednesday, June 08, 2005

Book MEME --- தொடரும் புத்தகச் சங்கிலி !!!

முதலில், என்னை(யும்!) அழைத்த (பரிந்துரைத்த!) 'யளனகபக' கண்ணனுக்கும், ராம்கி அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக :)

புத்தக எண்ணிக்கை: இருபது தான் தேறும் ! பொதுவாக, நூலகங்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து புத்தகங்களை வாங்கி படிப்பது வழக்கம். அதே போல், பல புத்தகங்கள் (நான் படித்த பின்னர்) இரவல் கொடுத்து திரும்பி வரவில்லை :-(

கடைசியாக வாசித்த புத்தகம்: The Leader and the Damned by Colin Forbes (இரண்டாவது முறையாக!)

கடைசியாக வாங்கிய புத்தகம்: நாளாச்சு !!!!

படிக்க விரும்பும் புத்தகம்: ரஜினி, சப்தமா சகாப்தமா by ரஜினி ராம்கி (நன்றி மறக்கலாமா:))

படித்ததில் பிடித்த 7 ஆங்கில புத்தகங்கள் (in random order!!!)

1. Devil's Alternative - Frederick Forsyth (A wonderful spy thriller with great twists)
2. The Stone Leopard - Colin Forbes
3. ILLUSIONS: THE ADVENTURES OF A RELUCTANT MESSIAH --- Richard Bach
4. The PROPHET --- Kahlil Gibran
5. Life Divine --- Shri Aurobindo
6. Moscow rules --- Robert Moss
7. Not a penny more, not a penny less --- Jeffrey Archer

பொதுவாக, பல ஆங்கில நாவலாசிரியர்கள் நுணுக்கமாக விவரிப்பதில் (அதாவது, elaboration in narration) தமிழ் நாவலாசிரியர்களை விட சிறந்தவர்கள் என்பது என் கணிப்பு.

படித்ததில் பிடித்த 5 தமிழ் புத்தகங்கள்: (in order of liking!!!)

1. பாரதியார் பாடல்கள் --- அத்தனையும்
2. பிரிவோம் சந்திப்போம் --- சுஜாதா (என்னுள் ஒரு பாதிப்பை ஏற்படுத்திய நாவல்)
3. பொன்னியின் செல்வன் --- கல்கி
4. ஸ்ரீரங்கத்து தேவதைகள் --- சுஜாதா
5. துணையெழுத்து --- அட்சரம் ராமகிருஷ்ணன்

நான் அழைக்க விரும்பும் 8 நபர்கள்:

1. ரோசா வசந்த்
2. மாண்ட்ரீசர்
3. DONDU Raghavan
4. அல்வாசிட்டி விஜய்
5. பத்ரி சேஷாத்ரி
6. சந்திரவதனா
7. சிங்கை அன்பு
8. "ப்ருந்தாவனம்" GOPI

தேசிகனுக்கு பிடித்த 5 தமிழ்ப் புத்தகங்களின் ஆசிரியர் யாரென்பது எனக்குத் தெரியும் என்பதால் அவர் பெயரை மேலே உள்ள பட்டியலில் இடவில்லை :) ராம்கி அவரை ஏற்கனவே அழைத்து விட்டார் !!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

5 மறுமொழிகள்:

Vijayakumar said...

பாலா படிப்பாளி லிஸ்ட்ல சேர மாட்டேன்னாலும் என்னையும் ஆட்டைக்கு சேர்த்துக்கிட்டீங்களே. ரொம்ப தேங்ஸ்ப்பா...

நம்மால முடிஞ்சது பார்த்திரலாம்.

மாயவரத்தான் said...

//கடைசியாக வாங்கிய புத்தகம்: நாளாச்சு !!!!//

'நாளாச்சு' அப்படீன்னு ஒரு புத்தகமா? எந்த பதிப்பகம்?! ;)

ஜெ. ராம்கி said...

//இரவல் கொடுத்து திரும்பி வரவில்லை :-(
//

ஆஹா, பாதிக்கப்பட்ட பார்ட்டி போலிருக்கு!

//Devil's Alternative - Frederick Forsyth (A wonderful spy thriller with great twists), The Stone Leopard - Colin Forbes. ILLUSIONS: THE ADVENTURES OF A RELUCTANT MESSIAH --- Richard Bach//

அய்யோ.. ஒளிவட்டம் தெரிஞ்சுடுச்சு!
கரெக்டா மாயவரத்தாரே?

said...

ஏனுங்க பாலா,

என்னாங்க இப்புடி திடுதிப்புனு இருந்தாப்புல இருந்து என்னிய ஆட்டத்துக்கு கூப்புட்டீங்க.

அடாடா.. இப்பப் பாத்து நம்ம கைல சினிமா நடிகைகள் பேட்டி ஒன்னு கூட சிக்காமப் போச்சே (எதுக்கா.. அதுல தான புரியாத இங்கிலீஸ் புஸ்தகம் படிப்பேன்னு உதார் உடுவாங்க)

அன்பு said...

நானும் எழுதிப்போட்டு இப்ப காணாம போய்டுச்சு:)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails